முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு  எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு  கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15  நிமிடம்  கழித்து  நன்கு  கழுவ வேண்டும்.

வாரத்திற்கு  ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர  பியூட்டிபார்லர்  போகாமல் பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் ஸ்பூன், கசகசா விழுது ஒரு  ஸ்பூன், சந்தனத்தூள் கால் ஸ்பூன் அனைத்தையும்  சேர்த்து   கெட்டியான விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.

தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் அப்ளை  பண்ணி  காய்ந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.
இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

 

Category: அழகுக்குறிப்புகள்
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *