அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள்

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள்

அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான்.
முக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.
முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.
உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் குறையும்.

ஆரஞ்சுப் பழங்களில் பெக்டின் என்னும் கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்றும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே ஆரஞ்சுப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்.

கெட்ட கொழுப்பு நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது.

உணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச்சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச்சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம்.
மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.
ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.

தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.

Category: அழகுக்குறிப்புகள்
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *